பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 శ அ.ச. ஞானசம்பந்தன் லேயே ஆகும். இப்பகுதியில் கல்வி வளர்ச்சி பெறப் பெற அகங்காரமும் உடன் வளரத் தொடங்கி விடுகிறது. பண்பாட்டை வளர்க்க வேண்டிய கல்வி, 'ஏனையோர்களைவிட அதிகம் கற்றவன் ஆதலால் யானே பெரியவன்' என்ற செருக்கும் உடன் வளரக் காரணமாகிறது. செல்வச்செருக்கைவிடக் கல்விச் செருக்கு ஆபத்தானது. மனிதனிடம் அமைந்திருக்கும் பொருட்செல்வம் அவனிலும் வேறுபட்டுத் தனித்து நிற்கின்றது. மேலும் அது நிலையில்லாதது. செல்வம் சேரும்பொழுது, உடன் செருக்கும் வளர்கின்றது என்றாலும் அச்செல்வம் இவனினும் வேறுபட்டு நிற்பதால் அதன் பயனாக விளையும் செருக்குமட்டும் இவன் மூளையைப் பற்றிநிற்கின்றது. செல்வம் போன வுடன் அச்செருக்கும் அழிந்துவிடுகிறது. கல்விச் செருக்கு இவ்வாறில்லை. கல்வி வளர வளர இச்செருக்கும் கல்வி வளரும் அந்த மூளையி லேயே தானும் வளர்கின்றதாதலின் இச்செருக்கைப் போக்குதல் கடினம். இச்செருக்குடையவர்கள் தலை நிமிர்ந்து (வீங்கி) நிற்பதையும், பணிவு என்ற சொல்லின் பொருளை அறியாதிருப்பதையும் இன்றும் காண் கிறோம். உண்மைக் கல்வி உண்மை அறிவை வளர்க்கும்; உண்மை அறிவு உண்மைப் பண்பாட்டை வளர்க்கும்; அப்பண்பாடு பணிவைத் தரும். அப்பணிவு உயிர்கள் அனைத்தையும் தன்னுடைய சகோதரர்களாகப் பாாககும.