பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 41 இதனை மனத்துட்கொண்ட ஆசிரியர் கல்வி கற்றவர்களைப் பார்த்து, ஒரு வினாவைத் தொடுக் கின்றார். இவ்வளவு ஏட்டுக் கல்வியையும் கேள்விக் கல்வியையும் மண்டையில் ஏற்றிக்கொண்டுள்ளீர் களே இதனால் என்ன பயன் அடைந்தீர்கள்? வாத மிட்டு, என்னுடைய கட்சியே சிறந்தது; என்வாதமே சிறந்தது; உங்களுடைய கட்சி தவறு என்று கூறுமள விற்குக் கல்வி பயன்பட்டதே தவிர, வேறு ஏதேனும் நற்பயனை விளைத்ததா என்ற வினாவிற்கு விடை கிடைத்தல் கடினம். கல்வித் திறனைக்கொண்டு வாதத்தில் வெல்வது மகிழ்ச்சியைத் தரக்கூடிய தாயினும் ஒவ்வொரு வெற்றியும் கர்வத்தை வளர்க்க வல்லவா பயன்படுகிறது. எப்படிச் சுற்றிவந்தாலும் கல்வியின் பயன் ஆணவத்தை வளர்க்கின்றது என்று கூறினால் இல்லை யென்று முற்றிலுமாக மறுக்கமுடியாது. இந்த நிலையில் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற வினாவைக் கேட்டுக்கொள்கிறார் வள்ளுவர். வாதத்தில் வெற்றிபெறும் அறிஞன், போரில் வெற்றிபெறும் அரசன் ஆகிய இருவரும் எந்தக் காரணத்திற்காக வாதம் அல்லது போரைத் தொடங்கியிருந்தாலும் அந்தக் காரணத்தை மறந்து விட்டுத் தாம் பெற்ற வெற்றியையே ஓயாது பாராட்டிக்கொண்டு தருக்குக் கொள்கின்றனர். போரில் கிடைக்கும் வெற்றிகாரணமாகத் தோன்றும் இந்தத் தருக்கைக் காட்டிலும் கல்வியால் பெறும் தருக்கு அதிகமானதும் தீமை பயப்பதுமாகும். போரில் பெறும் வெற்றிக்குப் பலர் நேரடிக்காரணமாகவும்,