பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அ.ச. ஞானசம்பந்தன் துணைக்காரணமாகவும் உள்ளனர். ஆனால் கல்வி, அதனால் செய்யப்படும் வாதம், கிடைக்கும் வெற்றி ஆகிய மூன்றிலும் பிறர் எவருடையதுணையும் தேவை யில்லை. எனவே அதிற் பெறும் தருக்கு இன்னும் ஆபத் தானது. இந்த நிலையில் கல்வியாற் பெறும் பயனென்ன என்ற வினாவை எழுப்புகிறார் வள்ளுவர். இதே வள்ளுவர் கல்வி, கல்லாமை என்ற தலைப்புகளில் கல்வி எவ்வளவு முக்கியமானது, கண்போன்றது என்றெல்லாம் பின்னர்ப் பேசப்போகிறவர், ‘கற்ப தனால் ஆய பயன் என் (2) என்று முதலதிகாரத்தி லேயே அந்த வினாவை எழுப்பவேண்டிய தேவை என்ன? இவ்வாறு நூல் தொடங்கிய இரண்டாவது குறளிலேயே கற்றதனால் ஆய பயன் என்' என்ற வினாவை அவர் தொடுப்பது ஏனைய நீதி நூல் வல்லார்களிலும் இவர் மாறுபட்டவர், தனித்து நிற்பவர் என்பதை எடுத்துக்காட்டி நிற்கின்றது. 'கற்றதனால் ஆய பயன் என் என்ற வினாவை எழுப்பியதாலேயே அவர் ஏதோ ஒரு முக்கியமான கருத்தை இதற்கு விடையாக்கப் போகிறார் என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்குகின்றது. விடைக்காக அதிகம் காத்திருக்கவிடாமல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்ற விடையை அடுத்த அடியிலேயே வைத்துவிட்டார். செல்வாக்கு, இசை, புகழ், செல்வம், வாழ்க்கை முன்னேற்றம், அரசர் தொடர்பு ஆகிய அனைத்தை யும் கல்வி தரும். மிகப் பெரும்பான்மையான கல்வி மான்கள் இவற்றில் ஒருசிலவற்றையோ அனைத்தை