பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi சங்கரையும் பெரும்பாலும் அதில் ஈடுபடுத்துவார். 'திருவாசகம் சில சிந்தனைகள் ஐந்து பகுதியும், நான் கண்ட பெரியவர்களும் இப்படி யொரு நிலையில் தான் தந்தையாரால் எழுதப்பெற்று வெளியாயின. இதன்பின்பு, கடந்த வருடத்தில் சிலவற்றை எழுதத் தொடங்கி முழு நூலாக்காமல் வைத்து விட்டார். முக்கியமாகத் திருமுருகாற்றுப்படை', 'திருக்குறள் ஆகியவை பற்றிய தம் சிந்தனைகளை எழுதத் தொடங்கி முடிக்காமலேயே விட்டுவிட்டார். இதன் பின்பு உடல் நலம் குன்றிய நேரத்திலும் பெரிய புராணத்தில் புதிய சில சிந்தனைகளை எழுத விரும்பி, திருஞான சம்பந்தர் வரலாற்றில் சில நுணுக்கங்கள் என்ற தலைப்பிட்டு ஆரம்பித்திருந்தார். ஆயினும் திருமுருகாற்றுப்படை, திருக்குறள், பெரியபுராணம் ஆகியவற்றில் அவரால் தொடங்கப் பெற்ற சிந்தனைகள் கிளை விரித்த விருட்சமாக முழுமையடைய முடியவில்லை. இச்சிந்தனைகள் விருட்சமாகாவிட்டாலும் விதையிலிருந்து வெளி வந்து, முளைவிட்டு நிற்கும் இளங்கன்றாக அல்லது இளஞ்செடியாக முழுமை பெற்றே நிற்கின்றன. எனவே இவற்றின் பயன் கருதி, இவை மூன்றையும் ஒரு தொகுப்பாக்கி, முற்றுறாச் சிந்தனைகள் என்ற பெயரில் நூலாக வெளியிட முனைந்துள்ளோம். நிறையை ஏற்றுப் பயனடைய வேண்டுகிறோம். இந்நூலுக்கு முன்னுரை வழங்கியும், படி திருத்தும் பணியினைச் செய்தும் உதவிய முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களுக்கும், இந்நூல் வெளியீட்டிற்குத் துணைபுரிந்த டாக்டர் என்.