பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இ. அ.ச. ஞானசம்பந்தன் லுள்ள சாற்றை மேலே இழுத்துக்கொள்கிறது. இந்த ஒரே சாற்றைக்கொண்டு சிறந்த அடித்தண்டு, வளப்ப மான கிளை, பசுமையான இலைகள், அரும்புகள், அழகிய மலர்கள் ஆகிய அனைத்தும் தத்தம் நிலை களில் சிறப்படையச் செய்கிறது. ஒரே சாறுதான் மாறுபட்ட இத்தனை பணிகளையும் செய்கிறது. அதுபோல ஒரே அறிவுதான் பல்வேறுபட்ட துறைகளிற் சென்று அவ்வத்துறையில் ஒருவரைச் சிறப்படையச் செய்கிறது. இந்த நிலையில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அடித்தண்டு, கிளை, இலை, அரும்பு, மலர் ஆகிய பல்வேறு பகுதிகளை ஒரே சாறு அவ்வவற்றிற்குரிய இயல்புகளோடு சிறக்கச் செய்தது உண்மைதான். இதனைப் பலரும் காணமுடியும். ஆனால் இந்தப் பணிகளைச் செய்வதைவிட நம் கண்ணாலும் கருத் தாலும் காணமுடியாத ஒரு பணியைச் செய்கிறது சாறு. அதுவே அச்செடிக்கு உயிரோட்டத்தைத் தருவ தாகும். அந்த உயிரோட்டத்தைத் தரவில்லையானால் அந்தச் சாறு அரும்பு, மலர் முதலியவற்றிற்கு எவ்வளவு துணைபுரியினும் செடி நிலைத்து நில்லாது. அதாவது உயிர்ச் சாற்றின் முதலாவது பணி செடிகளுக்கு உயிரோட்டத்தைத் தருவதாகும். இரண்டாவது பணி ஏனைய பற்பல பணிகளைச் செய்வதாகும். இந்த உதாரணத்தை மனத்துட் கொண்டு திருக்குறளிடம் செல்வோமேயானால், வள்ளுவர் நற்றாள் தொழு தலை ஏன் இவ்வளவு அழுத்தமாகக் கூறினார் என்பது விளங்கும். - மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் சாறு முதலாவ தாகவும் முக்கியமாகவும் செய்யவேண்டிய கடமை