பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 45 செடிக்கு உயிரோட்டத்தைத் தருவதாகும். அதைச் செய்யாமல் அரும்பு, மலர் முதலியவற்றை அழகு படுத்த எவ்வளவு முயன்றாலும் அது பயனின்றிக் கழியும். அதுபோலக் கல்வியென்பது முதலாவதாகச் செய்யவேண்டிய பணி, அக்கல்வியுடையவனை இறைவன் திருவடியைப் பணியுமாறு செய்தலாகும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டுப் புகழ் முதலிய ஏனையவற்றை எவ்வளவு தந்தாலும் அது பயன் படாக் கல்வியே ஆகும். - கல்விக்கு ஆதாரம் என்று சொல்லப்பெறும் அறிவு, கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதலாகிய அனைத்தும் கல்வியை வளர்க்கின்றன. ஆனால், இவை அனைத்தும் எதில் தொடங்கித் தொழிற்படு கின்றன? அறிவு என்ற ஒன்றில்தான் இவை தோன்றித் தொழிற்படுகின்றன. அப்படியானால் இந்த அறிவு முழுத்தன்மை பெற்றதா? உண்மையைக் கண்டு விட்டதா? நிலையானதா? என்ற வினாக்களை எழுப் பினால் இல்லை என்ற ஒரு சொல்லே இந்த வினாக் களுக்கு விடையாக வரும். நாளுக்குநாள் வளரும் அறிவு, நேற்றுக் காணாததை இன்று காண்கிறது. இன்று மெய்யானது என்று நம்பியதை, நாளை பொய் யானது என்று நிரூபிக்கிறது. 'அறிதோ றறியாமை கண்டற்றால் (110) என்று வள்ளுவரே இதனைக் கூறி யுள்ளார். எல்லையுடைய இந்த அறிவு நிலையான துமன்று. மெய்ப்பொருள் காண முற்படுகிறதே தவிர அதில் வெற்றியடைகிறதா என்றால், மிகச் சிலரைத் தவிர ஏனையோரைப் பொறுத்தமட்டில் இந்த அறிவு, மெய்ப்பொருளைக் காணத் தவறிவிடுகிறது. இந்தக்