பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒ. அச. ஞானசம்பந்தன் குறைபட்ட அறிவினாற் பெறும் கல்வி முழுத்தன்மை பெற்று வளருமேயானால், வாலறிவன் நற்றாளைச் சென்று தொழுவதே இறுதிக் குறிக்கோள் என்பதை அறிந்துகொள்ளும். வாலறிவினனை அறிந்துகொள்ள யாருக்கு அதிக வாய்ப்பு உண்டு : கல்வியின் அடித்தளமாக அமைகின்ற அறிவுக்கே அந்த வாய்ப்பு உண்டு. எவ்வளவு குறைபட்டதாயினும் மெய்ப்பொருளைக் காணச் சத்தியற்றதாயினும் இந்த அறிவு தன்னிட முள்ள கல்வியை வளர்த்துக்கொண்டே சென்றால் அறிவுசொரூபனாக இருக்குமொருவன் திருவடி களைத் தொழுவதே தன் கடன் என்பதை அறிந்து கொள்ளும். அதனை அறியாவிட்டால் இந்த அறிவும், அதில் தோன்றும் கல்வியும் பயனற்றுப் போய்விடும் என்பதை வலியுறுத்துவதே இரண்டாவது குறளின் உயிர்நாடியான கருத்து. இக்குறளில் மற்றொரு வேடிக்கையும் அமைந் துள்ளது. தலைக்குள் இருப்பது மூளை, அந்த மூளைக் குள் நியூரான்கள் என்ற பெயரையுடைய உயிரணுக் கள் நிறைந்துள்ளன. அறிவு, கல்வி முதலியவை இங்கே தான் பிறக்கின்றன. எல்லாம் ஒரே இடத்தில் தோன்று வதால் மண்டை வீங்கிவிடும் ஆபத்தும் ஏற்படுகிறது. வீங்கவீங்கத் தலை மேலும்மேலும் நிமிர்ந்து சென்று இறுதியில் வெடிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரேவழி இந்த வீங்கிய மண்டை குனிய வேண்டும். சும்மா குனிந்து பயனில்லை. இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அவன் திருவடி என்பது கீழேதான் உள்ளது. ஆக இந்த வீங்கிய மண்டை அந்தத்