பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ႏိုင္ငံး 47 திருவடியிடம் குனிந்து பணிந்து வணங்கும்பொழுது சிறந்த பயனைப் பெறுகிறது என்பதை அறிவிக்கவே 'நற்றாள் தொழாஅர் எனின் என்றார். அதாவது அறிவுவளர்ச்சி, கல்விவளர்ச்சி என்பவற்றின் முடி வான பயன் எது என்ற வினாவிற்கு, நற்றாள் தொழு தலே என்ற விடையைத் தந்து முடிக்கின்றார். விலங்கினங்கள் ஆறாவது அறிவின்மையின் நற்றாள் தொழும் பணியில் ஈடுபடுவதில்லை. மனித னுக்குமட்டும் தரப்பெற்றுள்ள இந்த ஆறாவது அறிவு இருபக்கமும் கூர்மையான வாள்போன்றது. இந்த அறிவு கல்வியையும் வளர்த்துக்கொண்டு நற்றாள் தொழும் பணியையும் ஏற்றுக்கொண்டால் ஆறாவது அறிவு பெற்றதன் முழுப்பயனும் கிட்டிவிடும். மிகப் பெரும்பான்மையானவர்கட்கு அறிவும் கல்வியும் இப்பணியைச் செய்வதில்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதேதோ செய்யத் தொடங்கி இறுதி யில் மனிதனைக் கவிழ்த்துவிடுகின்றன. இவற்றை யெல்லாம் நன்கு அறிந்த நம்முன்னோர் ஆறாவது அறிவு படைத்த மனிதனுக்கு ஒர் எச்சரிக்கையை விடுத்தனர். இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளுவர் கொடுத்த எச்சரிக்கை இது. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகர் கொடுத்த எச்சரிக்கை கல்வியென்னும் பல்கடல் பிழைத்தும்' (திருவாச. 4-38) என்பதாகும். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவப் பெருந்தகை கொடுத்த எச்சரிக்கை எத்தனை விதங்கள்தாம் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை' (தாயு. ஆனந்த 9) என்பதாகும். இருபதாம் நூற்றாண்