பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆ அ.ச. ஞானசம்பந்தன் டில் வாழ்ந்த மகாகவி பாரதி பல கற்றும் பல கேட்டும் முத்துமாரியம்மா பயனொன்றும் இல்லையடி முத்து மாரியம்மா (பாரதி; முத்துமாரி: ) என்ற எச்சரிக்கை விடுக்கின்றார். ஆசை முதலிய தீக்குணங்கள் மனிதனை முன்னேற விடாமல் தடை செய்யக் கூடியவை என்பதைப் பலரும் அறிவர்; சொல்லியும் உள்ளனர். ஆனால் கல்வியென்பது இதனினும் மாறுபட்டது. நற்றாள் தொழும் குறிக்கோளை நோக்கி மனிதனை அழைத்துச் செல்லவேண்டிய கல்வி, இடையே தறி கெட்டு அவனை அழிவுப் பாதையிற் கொண்டு செல்கிறது. நற்பயன் விளைக்கக்கூடியது கல்வி என்று பலரும் நம்பியிருக்க, அதே கல்வி இத்தீப்பயனை விளைப்பது கண்கூடு. ஆகலின் கல்வியைப் பொறுத்த மட்டில் மிக்க கவனத்தோடு இருத்தல் வேண்டும். ஏனைய தீக்குணங்கள் தீமையே பயக்குமென்பது நன்கு அறியப்பட்டது. ஆதலின் அவற்றிடம் பலரும் இயல்பாகவே கவனத்தோடு இருப்பர். ஆனால் கல்வி நல்லது என்று தொடங்கி இடையில் வழிதவறிப்போவ தால் அதனிடம் மிக்க கவனத்துடன் இருக்க வேண்டு மென்பதை இக்குறளில் வலியுறுத்தினாராயிற்று. மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். (3) முழுமுதற் பொருளுக்கு இரண்டாவது குறளில் 'வாலறிவன் என்ற பெயரைச் சூட்டியதன் மூலம், முற்றறிவினன் என்ற பொருளைப் பெறவைத்தார். அறிவு என்பது மூளையின்பாற் பட்டதென்றும் மூளை மண்டையில் உள்ளதென்றும் முன்னரே குறிப்பிட்