பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 49 டோம். அறிவின் துணைகொண்டு வளர்ந்து வெளிப் படுகின்ற கல்விக்குப் பயன் என்ன என்பதைக் கூற வந்த ஆசிரியர், இறைவன் திருவடிகளைத் தொழுவதே இறுதியான பயன் என்பதை அக்குறளில் கூறினார். இறைவனுக்குப் பல பெயர்கள் இருப்பினும் 'அறிவன் என்ற ஒரு புதுப்பெயரை அக்குறளிற் கூறக் காரணம் மூளையிலுள்ள அறிவு, அறிவனை இனங் கண்டுகொண்டு அவன் திருவடிகளைத் தொழ முற்படவேண்டும் என்பதே ஆகும். அறிவு பொருளின் இயல்பைப் பிரித்து ஆராய்ந்து இறுதியாக அது எத்தகையது என்ற முடிவிற்கு வருகிறது. எல்லாவற்றை யும் பிரித்துக்கொண்டே சென்று இறுதி உண்மையைக் காண முயல்வது அறிவின் வேலை. இவ்வறிவிற்கு அப்பாற்பட்டு நிற்கின்ற ஒன்று உணர்வு எனப்படும். அறிவு, மண்டையில் தோன்று வதுபோல உணர்வு இதயத்தில் தோன்றுகிறது. இதனையே இதய கமலம் என முன்னோர் குறிப் பிட்டனர். இதயம் என்று கூறியவுடன் இரத்த ஓட்டத் திற்குத் துணை செய்யும் இருதயத்தை நினைந்து கொள்ளத் தேவையில்லை. இவர்கள் சொல்லுகின்ற இதய கமலம், ஆதார சக்கரங்கள் ஆறனுள் அனாகதம் என்ற பகுதியைச் சேர்ந்ததாகும். இரத்த ஒட்டத்திற்கு உதவும் இருதயம் அமைந்திருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே மார்புக்கு நடுப்பகுதியில் அனாகதம் அல்லது இதயகமலம் அமைந்திருப்பதாக நம் முன்னோர் கூறினர்.நுண்பொருளாக உள்ள இந்த இதயம் மேலும்மேலும் விரிந்து மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களாய்ப் பரிண மிக்கிறது.