பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ. அ.ச. ஞானசம்பந்தன் இதய கமலம் என்று கூறும்போது இந்த நுண் பொருள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே சொல்லாற் குறிக்க முற்பட்டனர். உணர்வு தோன்றுவதற்கு இடமான இந்த இதயம், இறைவன் வந்து தங்குவதற்குரிய இடமாக அமையும்போது இதயகமலம் என்று பெயர் பெறு கிறது. இதயகமலம் துய்மையாக இருக்கும்பொழுது இறைவன் தானே விரும்பி அதில் குடிபுகுகிறான் என்ற கருத்தையே 'மலர்மிசை ஏகினான் (3) என்ற தொடரால் வள்ளுவர் குறிப்பிட்டார். வந்து தங்குதற்கு நடத்தல் இன்றியமையாத காரணமாக இருத்தலின் இதய கமலத்தில் வந்து தங்குபவனை ஏகினான்’ என்ற சொல்லால் குறிப் பிட்டார் என்று சற்று நீட்டிப் பொருள்செய்வதால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை. நான்குவகைச் சமயத்தாரும் பொதுவாகவும், சமண சமயத்தார் சிறப்பாகவும் கூறும் 'மலர்மிசை ஏகினான்’ என்ற தொடருக்கு அடியவர்களது இதயகமலத்தில் வந்து தங்கியவன் என்று பொருள்கொள்வதில் பெரும் பிழையொன்றும் ஏற்படாது. மனிதனுக்கு மிகச் சிறப்பாக அமைந்தவை அறிவும் உணர்வுமாகும். இந்த இரண்டும் திருவடி களைச் சேரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே இரண்டாம், மூன்றாம் குறள் களில் முறையே அறிவின் தொழிலையும், உணர்வின் தொழிலையும் கூறுகின்றார். அறிவு, உணர்வு என்ற இரண்டிற்காக இரண்டு குறள்களை அமைத்தாரேனும் இவை இரண்டையும்