பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 51 ஒப்பிடுவதுபோலச் சில சொற்களைப் பெய்கின்றார். கல்வியாளரைப் பொறுத்தமட்டில் அவர்களிலும் வேறுபட்டு நிர்க்குண, நிராமய, நிராலயனாய் அவன் நிற்கின்றான். எனவே அவன் திருவடிகள் இருக்கு மிடத்தை அறிவின் துணைகொண்டு நாடிச்சென்று, தொழுவது தன் கடமை என்பதை இந்த அறிவு உணர்ந்து செயற்படவேண்டும் என்பதைக் கூறினாரா யிற்று. ஆனால் உணர்வின்வழி நின்று இறைவனை நினைக்கின்றவனுக்கு அவன் திருவடிகளைத் தேடிச் செல்லவேண்டிய இன்றியமையாமை இல்லை. அதற்குப் பதிலாக அந்த இறைவனுடைய மாணடி’ இவனுடைய இதயகமலத்தை நாடி வருகின்றது. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. (4) தாம் கூறவந்த கடவுட் பொருளுக்குத் தாம் விரும்பிய முறையில் இலக்கணம் அமைக்கின்ற வள்ளுவர் எல்லாச் சமையத்தாரும் எல்லாக் காலத் தாரும் ஏற்றுக்கொள்கின்ற ஒன்றைக் கடவுள் இலக் கணமாக இங்கே பேசுகிறார். உயிர்கள் அனைத்தும் கடவுளின் ஒரு கூறு என்று கொண்டாலும் இந்த உயிர்களுக்கு என்று தனிக் குணம் ஒன்று அமைந்துவிடுகிறது. காணப்பட்ட, அனுபவிக்கப்பட்ட, புழக்கத்திலுள்ள எந்த ஒரு பொருளிடத்தும் உயிர்கள், விருப்பத்தையோ வெறுப்பையோ காட்டிநிற்கும். சில சமயங்களில் பொருளின் இயல்பை முழுதும் அறியாதபொழுது கூட அதனிடத்து விருப்பையோ வெறுப்பையோ