பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இ. அ.ச. ஞானசம்பந்தன் காட்டுமியல்பு உயிர்கட்கு உண்டு. ராக, துவேஷம் என்று வடநூலார் இதனைக் கூறுவர். உயிர்கட்குப் பொருள்கண்மாட்டுத் தோன்று கின்ற இந்த விருப்பு வெறுப்புகட்குக் காரணம் காண்டல் கடினம். எவ்விதக் காரணமுமின்றி ஒரு சிலவற்றின்மேல் விருப்பு அல்லது வெறுப்புக் கொள்ளுதல் உயிரியற்கை என்பதைப் புரிந்து கொண்டால்தான் வேண்டுதல் வேண்டாமை இலான் என்ற தொடரின் பொருளை நன்கு அறிந்து கொள்ளமுடியும். மிகப் பழங்காலந்தொட்டே இறைவனுக்கு இலக்கணமாகக் கருணை என்ற ஒன்றைக் கூறிய தமிழர் தன்னால்படைக்கப்பட்ட உயிர்களுள் சிலவற்றை விரும்பி ஏற்பதும் சிலவற்றை வெறுத்து ஒதுக்குவதும் ஆகிய பண்பு அவன்மாட்டு இல்லை என்றே கூறிப் போயினர். ஒரு பொருளிடத்து விருப்பு ஏற்படும்போது அது தனக்கு வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதனையடுத்து விரும்பிய பொருளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பொருள் கிட்டாதபோது, அதாவது முயற்சி பயனளியாதபோது சினம் பிறக்கிறது. சினம் முதிரமுதிர அறிவு தொழிற் பாடின்றி அமுங்கிவிடுகிறது. அறிவு அமுங்கவே செய்யத் தகுவது இன்னது தகாதது இன்னது என்ற வேறுபாட்டுணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. அதன் பிறகு அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் பெருந் தீங்கை விளைவிப்பனவாய் அமைந்துவிடு கின்றன. இத்துணைக் கேட்டிற்கும் மூலமாய் இருப்பது