பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 53 வேண்டும் என்று தொடங்கும் ஆசையின் வளர்ச்சியே ஆகும். இதன் எதிராகவுள்ள வேண்டாமை என்ற பண்பும் சிக்கலை விளைவிப்பதாகவே அமைகின்றது. ஒரு பொருளிடத்து வெறுப்புக்கொண்டு அது வேண்டாம் என்று நினைக்கின்றார் ஒருவர். ஆனால் என்னகாரணத்தாலோ அப்பொருள் அவரைவிட்டு நீக்குவதாக இல்லை, அவராலும் அப்பொருளை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் வெறுப்புணர்ச்சி வளரவளர வேண்டுதலில் நடை பெறுகின்ற அனைத்து நிலைகளும் வேண்டாமை' யிலும் நடைபெறுகின்றன. சுருங்கக் கூறினால் வேண்டுதல் எவ்வளவு தொல்லை தரக்கூடியதோ அதேபோல வேண்டாமையும் அவ்வளவு தொல்லை களையும் தரக்கூடும். இதனால்தான் வேண்டுதலோடு சேர்த்து, வேண்டாமையையும் கூறினார் வள்ளுவர். இதுவரை கூறியவற்றிலிருந்து இந்த இரண்டி லொன்று அல்லது இரண்டுமேகூட மனிதனைவிட்டு நீங்காது என்று கண்டோமல்லவா? அப்படியானால் இவையிரண்டிலிருந்தும் விடுதலையடைய வழி யென்ன? கீதாச்சாரியன் சமதிருஷ்டி என்றும், நம்மவர் சமநோக்கு என்றும் கூறிய ஒன்றுதான் இப்பொழுது மேற்கொள்ளவேண்டிய வழியாகும். விருப்புடைப் பொருளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வெறுப்படைப் பொருளை ஒதுக்கிவிடவேண்டும் என்றும் இயல்பாகத் தோன்றும் உணர்ச்சியை அடக்குவது முதற்படி விருப்பு வெறுப்புக்களை