பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 55 மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலும் இக்கருத்துப் பரவியிருந்தது. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளுமொரு நூல் பழைய ஏற்பாடு (Old testament) என்பதாகும். அதில்வரும் ஆபிரகாம், பாலை நிலத்தில் தன்னை நாடிவந்தவனுக்குத் தண்ணிர் கொடுத்த கதை பேசப்பெறுகிறது. தண்ணிரை வாங்கிக்கொண்டவன் அதைச் சூரிய னுக்குக் காட்டி நிவேதனம் செய்யத் தொடங்கினான். ஒருதெய்வ வழிபாட்டிற்கு முரண்பட்ட இச் செயலைக் கண்ட ஆபிரகாம் தண்ணிர்க் குவளை யைத் தட்டி விட்டான். அப்பொழுது கடவுள் ஆபிரகாமுடன் பேசியதாகக் கதை செல்கிறது. "ஆபிரகாம்! இந்தக் கொடிய பாலைவனத்தில் இவனைப் பிறப்பித்து இதுவரை வளர்த்து இப்பொழுது உன்னிடம் வருமாறு செய்தவனும் நான்தான். என்றாலும் இந்த விநாடி வரை இவன் என்னை நம்பவில்லை. வேறு ஏதேதோ தெய்வங்களை வழிபடுகிறான். ஆனாலும் எனக்கு, இவன்மேல் எவ்வித வெறுப்பும் இல்லை. என்னையே முழுவது மாக நம்பி என்னிடம் நேரில் பேசுமளவிற்கு வளர்ந்து விட்ட நீ என்னையே நம்புகிறாய் என்ற காரணத்தால் உன்மீது விருப்பும் இல்லை. அதாவது உன்மேல் விருப்பும், அவன்மேல் வெறுப்பும் என்பால் இல்லை. எனக்கு நீங்கள் இருவரும் சமமே” என்று கூறினார் கடவுள். வேண்டுதல் வேண்டாமை இலான் என்ற வள்ளுவன் கூற்றை அறிவதோடல்லாமல் உணர்வ தற்கும் இக்கதை பயன்படுகிறது.