பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 હ્યું છે அச. ஞானசம்பந்தன் தன்னால் படைக்கப்பட்ட உயிர்கள் சிலவற்றின் மேல் விருப்பும் சிலவற்றின்மேல் வெறுப்பும் கொண் டால் அது கடவுட்டன்மைக்கு இழுக்காகும். அறிவு பூர்வமாக, சமதிருஷ்டியைப்பற்றி உதாரணங்களோடு விரிவாகப் பேசிவிடமுடியும். அறிவின் செயல் அத் தோடு நின்றுவிடும். ஆனால் விருப்பு - வெறுப்பைக் காட்டுவது அறிவல்லவே! விருப்பு - வெறுப்பு என்பவை உணர்ச்சியின்பாற்பட்டவை அல்லவா? அந்த உணர்ச்சி தோன்றுமிடம் மனம் அல்லவா? இந்த இரண்டையும் விட்டுச் சமநிலையில் மனம் நிற்பது என்பது ஏறத்தாழ இயலாத காரியம். இந்த இயலாத காரியம் இறைவனிடத்தில் இயல்பாக அமைந்துள்ளது அதைக் குறிக்கவே வேண்டுதல் வேண்டாமை இலான் என்று ஒருசேர ஒரே தொடரில் இறைவனுக்கு இலக்கணம் வகுக்கின்றார். இதனைக் கூறவந்த வள்ளுவர் இறைவனை வேண்டி இந்த மனநிலையைப் பெற்றவருக்கு 'இடும்பை யாண்டும் இல' என்று கூறுவதன் நோக்க மென்ன? 'அடிசேர்ந்தார்க்கு என்ற தொடருக்குத் திருவடியை அடைந்தவர்க்கு என்றே பலரும் உரை கூறிப் போயினர். இறைவன் திருவடியை அடைந்தவர் களுக்குத் துன்பமில்லை என்று கூறுவதற்கு ஒரு திருவள்ளுவர் தேவையில்லை. மேலும் பருவுடம்போடு வாழும் உயிர்கள் இறைவன் திருவடியை இந்த உடம்போடு சென்று சேர்தல் இயலாத ஒன்று. எனவே அடிசேர்ந்தார் என்பதற்குத் திருவடியை அடையும் நோக்கத்துடன் ஓயாது அத்திருவடியையே சிந்திப்பவர்க்கு என்று