பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 57 பரிமேலழகர் கூறிய உரையே பொருத்தமுடையதாகத் தெரிகிறது. அப்படித் திருவடியை ஓயாது சிந்திப்ப வர்க்கு முதன்முதலாகக் கிடைப்பது வேண்டுதல் வேண்டாமை என்ற சம திருஷ்டியாகும். அதனை அடைந்துவிட்ட ஒருவனுக்குத் தன்பால் வந்து எய்து கின்ற எந்த ஒன்றையும் இன்பம் என்றோ துன்பம் என்றோ பகுத்துக் காணும் இயல்பு இல்லாமற் போய் விடுகிறது. இந்தச் சமநோக்கு நிலை ஒரோவழி கவனக் குறைவாலோ உறுதிப்பாட்டின் தளர்ச்சியாலோ நீங்கு மாயின் அந்த இடை நேரத்தில் இந்தத் துன்பம் வந்து பற்றிவிடுமோ என்று ஐயுறுவாரை நோக்கி யாண்டும்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன்மூலம் மனத் திற்குத் தென்பை ஊட்டுகிறார் ஆசிரியர். அடுத்து உள்ளது, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5) என்ற குறளாகும். இறைவனுடைய உண்மையோடு கூடிய புகழைப் புரிந்தவரிடம் அஞஞானத்தோடு கூடிய நல்வினை தீவினை என்ற இருவினைகளும் சென்று அடையமாட்டா என்பது இதன் கருத்தாகும். இக்குறளில் சொல்லப்பட்ட இரண்டு கருத் துக்கள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. இறைவன் புகழ் என்று கூறியிருந்தாலே போதுமானது. உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களும் இறைவன் புகழைப் பாடு கின்றன. இறைவன் என்ற கடவுட்பொருளை ஏற்காத சமயத்தார்கள்கூடத் தங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வனை இறைவன் என்ற சொல்லால் குறிக்