பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இ அச. ஞானசம்பந்தன் கின்றனர். அப்படியிருக்க, பொருள்சேர் புகழ் என்ற தொடரில் பொருள்சேர்' என்று ஒரு சொல்லைப் புகழின் முன்னர் ஆசிரியர் பெய்வதன் நோக்க மென்ன? உலகிடை வாழும் நாம் வாழ்க்கைச் சுழற்சியில் அகப்பட்டு விரும்பியோ விரும்பாமலோ ஒரு சிலரைப் புகழவேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடு கிறது. இக்காலத்தில் வாழ்கின்ற நாம் மேலே கூறிய கூற்றை நன்கு புரிந்துகொள்ளமுடியும். பெரும் பதவியில் எல்லையற்ற அதிகாரங்களைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் தலைவர்களைப் புகழ்வது என்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. இப் புகழுரைகள் அனைத்தும் வெறும் சொல்லலங்கார மாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். இப்புகழுரை யைக் கூறுகின்றவர்கள் மனத்திலோ, உள்ளத்திலோ எவ்வித ஈடுபாடோ, உணர்ச்சியோ இல்லாமல் வாயளவில் சொற்களை அடுக்கிப் புகழ்மாலைகள் சார்த்துகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், புகழப்படுகின்றவரைத் தவிர இப்புகழுரையைக் கூறுகின்றவர், அதை அருகிலிருந்து கேட்கின்றவர் ஆகிய அனைவரும் இதில் ஒரு சொல்லைக்கூட நம்புவதில்லை. அது பொய்யுரை என்பதை அறிவர். அப்படியானால் பொய்யாகிய புகழுரை புகலப் படுவது ஏன்? அங்கேதான் இரண்டாவது வேடிக்கை மறைந்து நிற்கின்றது. யார்மேல் இந்தப் புகழுரை பேசப்படுகின்றதோ அவர் இஃது உண்மையென்றே நம்புகிறார். ஏனை யோரும் நம்புவதாகவே நினைக்கிறார். நாளாவட்டத்