பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 59 தில் இப்பொய்ப் புகழுரைக்கு அவர் முழுவதும் இரை யாகி விடுகிறார். இப்புகழுரையை ஏற்பவர் அறிவு, கல்வி, அனுபவம் ஆகிய அனைத்திலும் மிகுந்திருக் கலாம். அப்படியிருக்க இப்புகழுரையில் ஏன் மயங்கு கிறார்? மனித மனத்தின் ஒரு விந்தையான கூறு இது தான். இப்புகழுரைகள் பொய்யானவை என்ற எண்ணமே அவருக்குத் தோன்றுவதில்லை. இது இன்று நேற்றுத் தோன்றியதுமல்ல, தமிழகத்தில் மட்டும் காணப்படும் ஒன்றன்றும் இது. மிடுக்கு இலாதானை விமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை. (திருமுறை: 7:34-2) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடும்போது இக் கருத்து வெட்டவெளிச்சமாகிறது. ஷேக்ஸ்பியருடைய ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தில் வரும் ஒரு பகுதி இக்கருத்தை மேலும் வலியுறுத்துவதாகும். கேஷியஸ் என்ற ஆழமான வஞ்சனை மிகுந்த பாத்திரத்திடம் மற்றொரு பாத்திரம் பின்வருமாறு பேசுகிறது. கேஷியஸ் ஜூலியஸ் சீசருக்கு வெற்றுப் புகழுரைகள் சுத்தமாகப் பிடிக் காதே அப்படியிருக்க நீ என்ன சொல்லி அவனைக் கவரமுடியும்?" இவ்வாறு அப்பாத்திரம் கேட்டவுடன் கேஷியஸ் கூறும்விடை மிக நுணுக்கமானது. "ஓ அதுவா! நான் சீசரிடம் சென்று முகஸ்துதி, வெற்றுப் புகழுரை என்பவை உனக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்று சொல்கிறேன் அதைக் கேட்ட அவன் அதையே புகழுரையாகக் கொண்டு ஏமாந்துபோகிறான்” என்று