பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ↔ அ.ச. ஞானசம்பந்தன் கூறும் இடம் மேலே கூறிய கருத்துக்கு அரண் செய்கிறது. பொருள் சேராத வெற்றுப் புகழுரையின் விளக்கம்தான் மேலே தரப்பெற்றுள்ளது. தன்னைத் தான் அறிந்துகொள்ளாத, தன் தகுதி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாத ஒரு மனிதன், எதிரே யுள்ளவன் பேச்சிலிருந்து அதனைப் பேசுகின்றவன் மனநிலையை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? எவ்விதப் பொருளுமில்லாத இந்த வெற்றுரையை வெற்றுரையென்று அறியக்கூடியவர் சிலர் இன்றும் உலகிடை உண்டு. தம்மைத்தாம் நன்கு அறிந்தவர்கள், எதிரேயுள்ளவனுடைய பேச்சிலிருந்து அவன் உள்ளத்தை எடைபோடும் ஆற்றல் உள்ளவர்கள் ஒரு சிலர் உண்டு. இவர்கள் எளிதாக வெற்றுப் புகழுரையை அறிந்துகொள்வர். - 'பொருள் சேர் புகழ்' என்பதற்கு எதிர்ப்பதம் பொருள் சேராத புகழ் என்பதுதானே? அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையா என்று பலர் நினைக்கக்கூடும். இவ்விளக்கம் தருவதற்கு ஒரு காரண முண்டு. எந்த ஒரு செயலும் பழக்கத்தால் வலுப்பெற்று விடுகிறது. மேலே கூறியபடி பயனில் சொல் பாராட்டிக்கொண்டு, அர்த்தமில்லாது பிறரைப் புகழ்ந்துகொண்டு வாழப் பழகிவிட்டவர்கள் இதி லிருந்து மீள்வது கடினம். நாளாவட்டத்தில் எவ்வித உணர்வும் இன்றி, வெறும் பழக்கவசத்தால் பயனில் சொல் பேசும் இயல்பை இவர்கள் பெற்றுவிடு கின்றனர். இந்த நிலையை அடைந்தவர்கள் இறைவன் புகழைப் பாடத் தொடங்கினாலும் அச்சொற்கள்