பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் , 61 பொருளற்ற சொல்லலங்காரமாகவே முடியும். அப்படியானால் இறைவன் புகழைப் பேசும் சொற் களுக்குப் பொருள் உண்டா? இல்லையா? உண்டு என்பது சொல்லாமலே விளங்கும். அப்படியானால் பொருள் சேர்’ என்று ஏன் சொல்லவேண்டும்? மிக நுணுக்கமாக நின்று சிந்திக்கவேண்டிய இடம் இது. இறைவன் புகழ்பாடும் சொற்களும் அந்தச் சொற்கள் குறிக்கும் பொருளும் உமாகாந்தனைப் போல இணைபிரியாது நிற்கின்றன. எனவே பொருள் சேர் என்ற தொடருக்குப் பொருள் சென்று சேர வேண்டும் என்று உரைகாண்பது சரியன்று. அப்படி யானால் பொருள்சேர் புகழ்' என்பதற்கு என்ன பொருள் செய்வது! இது மிக எளிதான காரியமே யாகும். புகழ் புரிதல் என்பது, புகழைச் சொல்லுதல், புகழ் பாடுதல் என்ற பொருளைத் தரும். இந்தப் புகழ்ச் சொல்லோடு அதன் பொருள் கலந்தே நிற்கிறது என்ற கூற்றை ஏற்றுக்கொண்டால் பொருள்சேர் புகழ் என்பதற்கு என்ன விளக்கம் கூறுவது? சொல்லும் பொருளும் ஒரே நேரத்தில் தோன்றுவன என்றாலும், அந்தச் சொல் வாயிடை வெளிப்படும் அதே நேரத் தில் சொல்லின் பொருள் மனத்தில் அல்லது ஆழ மான உணர்வில் நிற்றல்வேண்டும். பொருள் உணர் விடை நிற்கும் அதே நேரத்தில் சொல் வெளிப்படுமே யானால் அந்தச் சொல் பேராற்றல் படைத்ததாக ஆகிவிடுகிறது. இறைவன் எங்கும் நிறைந்திருப்பதுடன் சொல் பவர் உள்ளத்திடையும் கரந்து உறைகின்றான்