பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ఖీ அ.ச. ஞானசம்பந்தன் ஆதலின், பேசுகின்ற ஒருவனுடைய உரை வெற் றுரையா அல்லது உணர்வோடு கலந்து வெளிப்படும் உரையா என்பதை எளிதில் அறிகிறான். எனவே அவனைப் புகழும் உரை பொருள்சேர் புகழுரையாக உள்ளத்திலிருந்து வெளிப்பட வேண்டும். இப்படி வெளிப்படும் புகழுரை ஏதோ ஒரு பயனைக் கருதி வெளிப்படுவதில்லை. தமக்கு இது வேண்டும் அதுவேண்டும் என்று வேண்டுவதற்காக இறைவன் புகழ்பாடும் ஒருவரிடம் தம் வேட்கையை வெளிப்படுத்தும் எண்ணம் மனத்திடை நிறைந் திருக்குமே தவிர, இறைவனைப் புகழும் சொல்லி லுள்ள பொருள் இந்நிலையில் அவர் மனத்திடை இராது. வேண்டிக்கொள்வதில் தவறில்லை. என்றா லும் எவ்விதப் பயனையும் கருதாமல் இறைவன் கருணையை மனத்தில் இருத்திக்கொண்டு (புரிந்து கொண்டு) அவன் புகழை வாயில் பாடும் நிலையை விட ஒன்றை வேண்டிப் பாடுவது பயன்மிகக் குறைந்ததுதான். ஒன்றை வேண்டி, அவன் புகழ் பாடுவதில் தன் முனைப்பு இருக்கின்றது. அது வெளிப்பட்டு எனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்கும்போது அந்த அகங்காரம் மமகாரமாக விரிகின்றது. அதன் அடிப்படையில் வெளிவரும் புகழுரை பயன் குறைந்தது; இருவினைகளையும் விளைக்கக்கூடியது. இது கருதியே இருள்சேர்' என்ற சொல்லுக்கு அஞ்ஞானம் என்ற பொருளோடு மறைந்து நிற்கும் அகங்காரம் என்ற பொருளையும் சில உரையாசிரியர் கள் கூறிப்போயினர்.