பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 63 இருள்சேர் இருவினைக்கும் இருவினைக்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. சம திருஷ்டியுடைய ஞானி செய்யும் காரியங்களின் பயன் நல்லதாயினும் கெட்ட தாயினும் அவனைச் சென்று பற்றுவதில்லை. அதே போல அகங்கார மமகாரங்களை முற்றும் ஒழித்து இறையன்பில் தோய்ந்து நிற்கும் ஓர் அடியவன் செயல் நல்லதாயினும் கெட்டதாயினும் அதன் பயன் அவளிடம் செல்வதில்லை. (சண்டேசர் வரலாறு காண்க) இறைவன் பொருள்சேர் புகழ்புரிகின்ற ஒருவர் நல்லது கெட்டதாகிய எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதற்கு அவர் பொறுப்பாளியாகமாட்டார். செயலை (வினையை)ச் செய்வதுதான் அவர் கடமையே தவிர அச்செயலின் பயன் அவரைச் சென்று பற்றுவதில்லை. “கர்மன் ஏவ அதிகாரஸ்த்தே மா பலேகூடி கதாசனா” என்ற கீதை வாக்கியம் இக்கருத்தையே வலியுறுத்து கிறது. இதனை மனத்துட்கொண்ட வள்ளுவர் இரு வினைகள், அவற்றின் பயன்கள் ஆகியவை இவர்கள் பாற் செல்வதில்லை என்பதைக் குறிக்கவே இரு வினையும் சேரா என்றார். இவர்கள் செய்யும் செயலுக்கும் சாதாரண மனிதர்கள் செய்யும் செயலுக்கும் ஏதேனும் வேறு பாடு உண்டா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் சாதாரண மனிதர்களிடம் இரு வினையும் அவற்றின் பயன்களும் சென்று சேர் கின்றனவே, இவர்களிடம் ஏன் அவை செல்வ தில்லை ? சாதாரணமக்கள் ஆணவத்தின் இருள்) பயனாகச் செயல்படுதலின் இருவினைகள் அவரிடம்