பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இ. அ.ச. ஞானசம்பந்தன் சென்று சேர்கின்றன. இதனைக் குறிக்க இருள்சேர் இருவினை என்றார். காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி இறைவன் பொருள்சேர் புகழ் புரிபவர்கள் எச்செயலைச் செய்தாலும் அதில் இருள் சேர்ந்து இருப்பதில்லை ஆதலால் அதன் பயனாகிய வினை கள் இவர்களைச் சென்று அடைவதில்லை. இருவினை சேரா என்று கூறும்பொழுது வினைக்கோர் தலைமைத்தன்மை கொடுத்து அவை சேரா என்று கூறியதால் இத்தகையவரிடம் அந்த இருவினைகளும் அவற்றின் பயன்களும் எக்காரணம் கொண்டும் சேரமாட்டா என்ற குறிப்பையும் உணர்த் தினார். பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார். (6) என்றது அடுத்துள்ள திருக்குறளாகும். இந்தக் குறளும் ஏனைய குறள்களைப்போலப் பல்வேறு விதமாகப் பொருள்செய்ய இடந்தந்து நிற்கிறது. பொறி வாயில் ஐந்து அவித்தான் என்ற தொடர் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் வாயிலாகக் கொண்டு மனத்தினுள் நுழையும் ஐந்து ஆசைகளை யும் அவித்தவன் என்ற பொருளைக் கொள்ளுமாறு நிற்கின்றது. ஜைனர், பெளத்தர் ஆகிய இரு சமயத்தார்களில் முறையே அருகப்பெருமானும், புத்ததேவரும் பொறி வாயில் ஐந்தையும் அவித்து, இத்தலைமைப் பதவியை அடைந்து, பிற உயிர்கள் ஈடேற வழிவகுத்தவர்கள் என்ற கொள்கை நிலைபெற்றுள்ளது. அப்படியானால் திருவள்ளுவர் பொதுமறை எழுதவந்து, இவ்வளவு