பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 65 வெளிப்படையாக அருகனையோ, புத்தனையோ குறிப்பாரா என்ற வினாப் பிறக்கும். திருவள்ளுவர் ஜைன, பெளத்த அடிப்படைக் கோட்பாடுகள் சிலவற்றை விரும்பி ஏற்றிருக்கலாம். கொல்லாமை, வேள்வி மறுப்பு ஆகியவற்றில் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதில் ஐய மில்லை. ஆனால் இவற்றைமட்டும் வைத்துக்கொண்டு அவரைச் ஜைனர் என்றோ பெளத்தர் என்றோ முத்திரையிடுதல் பொருத்தமாகத் தோன்றவில்லை. தம்முடைய சமயம் என்ன என்பதை எந்த இடத்திலும் அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை; ஏன் ஊகித்து அறியக்கூட வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் எல்லாக் கொள்கைகளுக்கும் பொருந்த இந்தக் குறள்களுக்குப் பொருள் செய்வதே பொருத்தம் என்று கருதத்தோன்றுகிறது. பெயர் தெரிந்த பலரும், பெயர் தெரியாத இருவரும் (பழைய உரை 1, பழைய உரை Il குறளுக்கு உரையெழுதியுள்ளனர். இவ்வுரைகள் அனைத்திலும் தத்தம் சமயக் கொள்கையைத் திருக்குறளில் ஏற்ற இவர்கள் முனைந்துள்ளனர் என்பதை நன்கு தெரிய முடிகிறது. குறளின் சிறப்பு இவர்கள் அனைவருக்கும் இடந்தந்து நிற்கிறது என்பதேயாகும். இவை ஒருபுறம் இருக்க, மேலே காட்டப்பெற்ற திருக்குறளில் 'அவித்தான் என்ற சொல் பயன் படுத்தப் பெற்றிருப்பதைக் காணலாம். முன்னர் வேற்றுவடிவத்தில் இருக்கின்ற அரிசி, கிழங்கு முதலிய வற்றை அடுப்பிலிட்டு நீரின் உதவிகொண்டு வேகு மாறு செய்தலையே அவித்தல் என்ற சொல்லால்