பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. இ. அ.ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றோம். இட்டலி அவித்தான், கிழங்கை அவித்தான் என்ற பிரயோகம் இன்றும் புழக்கத்தில் உள்ளது. அதாவது அவிப்பதற்கு முன் மாவாகவோ, பச்சைக் கிழங்காகவோ இருந்த ஒன்று அவித்த பின்னர் அதே வடிவத்துடன் காணப்பட்டாலும் அதன் இயல்பு முழுவதும் மாறியிருப்பதைக் காண லாம். அவித்தான் என்ற சொல்லிற்குப் பொருள் செய்யும்போது மேலே கூறப்பெற்ற இந்த இயல்புகளை மனத்தில் கொள்ளவேண்டும். இந்த நினைவோடு "பொறிவாயில் ஐந்து அவித்தான் என்ற தொடரை மீட்டும் நோக்குவோமாக. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறி களை வாயிலாக வைத்து, அதன்வழி, போக்கு-வரவு செய்கின்ற ஒன்று எது? அதுவே ஆசை. ஒரே ஆசை இப்பொறிகளின் வழியாக உள்ளே நுழைந்து மனத்தைப் பற்றும்போது அப்பொறிகளுக்கேற்ற வடிவம் எடுக்கிறது. எனவே இந்த ஐந்து ஆசைகளை யும் அவித்த ஒருவரைப்பற்றி இக்குறள் பேசுவதாகப் பலரும் உரை கூறியுள்ளனர். தன்மாட்டு இயல்பாய் அமைந்திருந்த பொறிகள் ஐந்தையும் அடக்கி, அதற்குரிய வாயில்களையும் அடைத்தவன் என்று ஜைனர்களும் பெளத்தர்களும் எளிதாக உரை கூறிவிட்டனர். அவர்கள் சமய வரலாற்றின்படி அவ்வச் சமயங்களைத் தோற்றுவித்த தலைவர்கள் மனிதர்களே ஆதலால் இது பொருந்துவ தேயாகும். அவித்தான் என்ற சொல்லின் போக்கைக் கவனித்தால் பொறிவாயில் ஐந்தையும் அவித்துக் கொண்டவர்கள் என்று பொருள் கூறுவது சற்றுக்