பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 67 கடினமாகவே உள்ளது. அவித்தான் என்ற சொல் இயற்றுதற் கர்த்தாவாக நின்று பிறிதோர் பொருளிடத் துள்ள ஒரு நிலையை மாற்றி மற்றோர்நிலைக்குக் கொண்டுவருபவன் என்ற பொருளையே தந்து நிற்கிறது. இட்டலி அவித்தான், தீயை அவித்தான் கிழங்கை அவித்தான் முதலிய தொடர்களில் இப் பொருளைத் தெளிவாகக் காணலாம். இட்டலி அவித்தான், தீயை அவித்தான் என்ற இரண்டு தொடர்களிலும் ஒரு வேறுபாடிருப்பதைக் காண லாம். அரிசிமா, புதிய வடிவும் கெட்டித் தன்மையும் உண்பதற்குரிய தகுதியும் பெறும் நிலையை அவித் தான் என்ற சொல் தந்து நிற்கிறது. தீயை அவித்தான் என்று சொல்லும்போது அவிக்கப்படுகின்ற பொருள் தீயாக இருத்தலின் அது பற்றியிருந்த பொருள் விறகாகவோ, துணியாகவோ இருத்தலின் அவிக்கப் பட்ட பிறகு அந்த விறகும் துணியும் பழைய நிலை மாறிக் கரியாகவே எஞ்சுகிறது. இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு பொறி வாயில் ஐந்தவித்தான் என்ற தொடரை மீண்டும் ஒரு முறை நோக்கினால் பொருள் வேறுபடுவதைக் காண லாம். ஐந்து பொறிவாயில்களை உடையவன் ஒருவன், அந்த வாயில்களை அவிக்கின்றவன் மற்றொருவன் என்பது விளங்கும். மாவின் தன்மை நீங்கிப் புதிய தன்மைகளுடன் இட்டலி வடிவெடுப்பதுபோலப் பழைய பொறிவாயில்கள் ஐந்தும் தம் தன்மை நீங்கிப் புதிய தன்மையுடன், முற்றிலும் வேறாகி இயங்கத் தொடங்குகின்றன. அப் பொறிகளை இவ்வாறு பழமை துறந்து புதுமுறைகளிற் பணிசெய்யச் செய்த வனை 'அவித்தான் என்ற சொல்லால் ஆசிரியர் குறிப்பிடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.