பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இ. அ.ச. ஞானசம்பந்தன் ஐந்து வாயில்களையும் அவித்துக்கொண்டவன், அவை இருந்தும் பணி செய்யாமற் செய்து கொண்ட வன் என்று கூறுவதைக் காட்டிலும், மேலே கூறிய பொருள் பொருத்தமுடையதெனத் தோன்றுகிறது. அடுத்து நிற்பது பொய்தீர் ஒழுக்க நெறி என்பதாகும். இது யார் வகுத்த நெறி? பொறிவாயில் ஐந்து அவித்தான் என்பதற்கு பொறிவாயில் ஐந்தை உடையவன் ஒருவன், அதனை அவித்தவன் மற்றொருவன் என்று உரைகண்டோமல்லவா? இந்த இருவரில் அதாவது ஐந்தை உடையவன் ஒருவன், அவனுடைய ஐந்தை அவித்தவன் மற்றொருவன் என்ற இருவர் என்று பொருள் செய்த பிறகு, பொய்தீர் ஒழுக்க நெறி என்று வருவதால் முன்னை இருவரில் இந்நெறியை வகுத்தவர் யார் என்ற வினாத் தோன்று மன்றே! இவ்விடத்தில் அவித்தான் என்பதை நடு நிலைப் பொருளாக்கித் தன்னை நாடி வந்தவர்களின் பொறிவாயில் ஐந்தையும் அவித்தவன் அப்படிப்பட்ட ஒருவனே பொய்தீர் நெறியை வகுக்க முடியும் என்று கொள்வதில் தவறில்லை. வேறுவகையாகக் கூறுமிடத்து, பொய்தீர் ஒழுக்க நெறியை எதற்காக வகுத்தான்? உலகிடை வாழும் மக்கள் பொறிவாயில் ஐந்தை மூடமுடியாமல் செய்வ தறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது ஒருவன் இந்த ஒழுக்க நெறியைக் கற்பித்தான். இந்த நெறியைப் பின்பற்றுவர்களின் பொறிகள் முன்போல் வேலை செய்யவில்லை. காரணம் அவன் கற்பித்த இந்த ஒழுக்க நெறியே, அவர்களுடைய பொறிபுலன்களைப் பணியிழந்து நிற்குமாறு செய்துவிட்டது.