பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் 69 நீர்கொண்டு தீயை அவித்தான் என்று கூறும்பொழுது அவிக்கின்றவன், தீயை அவிக்கக் கையாண்ட சாதனம் நீராகும். அதுபோல அவித்தான் என்ற வினையாலணையும் பெயராற் சுட்டப்பட்ட இறைவன் அல்லது குரு பொய்தீர் ஒழுக்க நெறி என்ற சாதனத்தைக் கொண்டு, மக்களுடைய பொறிவாயில் ஐந்தையும் அவித்தான் என்று கொள்ளலாம். ஏனைய உரையாசிரியர்கள் யாரும் சிந்திக்காத முறையில் அவித்தான் என்ற சொல்லுக்கு குரு என்று பொருள்கண்டார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. உலக வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமேயானால், பல் வேறு சமயங்களைத் தோற்றுவித்த குருமார்கள், முன்னரே உள்ள சமயங்களை வளர்த்த குருமார்கள் அனைவரும் சில அடிப்படைக் கொள்கைகளை வகுத்து உய்கதி அடைவதற்குரிய நெறி இதுவே எனக் கூறிப்போயினர். இந்த நெறியை வகுத்த மூலவர்கள் தங்களுடைய பொறிவாயில் ஐந்தும் அவிந்த பிறகே குருவாக ஆயினர். பின்னர், தம் அநுபவ அடிப்படை யில் அவ்வக் காலத்திற்குத் தேவையான சில நெறி களை வகுத்து அந்நெறியிற் செல்லுமாறு மக்களை வேண்டினர். அந்நெறிச் சென்றவர்கள் பொறிவாயில் ஐந்தை ஒரளவு அவிக்கும் ஆற்றலைப் பெற்றார்கள். இத்தகைய குருமார்கள் ஏதோவொரு காலத்தில் தோன்றுவரேயன்றி நாம் வேண்டிய பொழுதெல்லாம் நாம் வேண்டிய இடத்திலெல்லாம் தோன்றுவ தில்லை. கீதாசாரியன் "சம்பவாமி யுகே யுகே" என்று கூறியதும் நினைவிற் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஈடிணையற்ற குருமார்கள் வகுத்த ஒழுக்க நெறியைச் சொல்லவந்த ஆசிரியர், "பொய்தீர்”