பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இ. அ.ச. ஞானசம்பந்தன் என்றொரு அடைகொடுக்கவேண்டிய தேவை என்ன? உலக வரலாற்றைப் பார்ப்பவர்களுக்கு ஒன்று நன்கு தெரியும். உண்மையான குரு ஒருவர் தோன்றினால் அவரைப் பின்பற்றுவதாகவும் அவர் வழிச் செல்வதாகவும் சொல்லிக்கொண்டு தோன்றும் போலிக் குருமார்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. தங்கள் வசதிக்கும் செளகரியத்திற்கும் ஏற்ப இந்தப் போலிக் குருமார்கள் ஒழுக்க நெறியை வகுப்பர். இவ்வழியில் செல்பவர் அதோகதி ஆவது திண்ணம். இவர்கள் காட்டிய ஒழுக்க நெறியிலிருந்து உண்மைக் குருமார் கள் வகுத்த ஒழுக்க நெறியை வேறுபடுத்திக் காட்டவே 'பொய்தீர் ஒழுக்க நெறி என்றார். போலிகள் வகுத்த போலி நெறிகள் காலாந் தரத்தில் அழிந்துவிடும். உண்மையானவர் வகுத்த பொய்தீர் ஒழுக்க நெறி, என்றும் நின்று நிலவும். அதனைச் சுட்டவே பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார். நீடுவாழ்வார் என்றார் ஆசிரியர். தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (7) என்பது அடுத்து நிற்கும் திருக்குறளாகும். இந்த அதிகாரம் முழுவதிலும் ஒன்றாம், ஐந்தாம், ஆறாம் குறள்கள் நீங்க ஏனைய ஏழு குறள்களிலும் திருவடி பேசப்பெறுகிறது. இந்நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவருகின்ற சைவம், வைணவம் என்ற இரண்டு சமயங்களும் வடிவு கடந்த இறைவனுக்கு வடிவு கற்பித்ததோடல்லாமல் அவ்வடிவிலும் திருவடியைப் பெரிதாகப் போற்றின. சங்க நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந் தேவனாரில் தொடங்கித்