பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 71 திருவடிப் பெருமை பேசப்பெறுகிறது. "ஒருவன் இரு தாள் மலர்க்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்குறுநூறு: கடவுள்வாழ்த்து) என்று பாடி யுள்ளது நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப் படையில் 'செவ்வேற்சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ள மொடு” (திருமுருகாற்று 61, 62) என்ற அடி சிந்தனைக்குரியது. “தாமரை புரையும் காமர் சேவடி” (குறுந்தொகை கடவுள்வாழ்த்து) எனவரும் பழைய சங்கப்பாட்டுத் தொடரும் மேலே கூறிய கருத்தை வலி யுறுத்தும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்று கருதப்பெறும் சிலப்பதிகாரத்திலும் திருவடி பற்றிய செய்திகள் வருகின்றன. - - - -மலைமிசை நின்றோன் பொற்றாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் (சிலம்பு காடுகாண் 133, 134) என்றும்


அவன் துணைமலர்த் தாளினை

ஏன்று துயர் கெடுக்கும்....... (சிலம்பு காடுகாண் 137, 138) என்றும் வருவதைக் காணலாம். இவற்றையடுத்த பக்தி இயக்கக் காலத்திலும் திருவடிப்பெருமை மிகுதியாகப் பேசப்பெறுகிறது. நாமரூபங்கடந்த ஒரு பொருளுக்கு வடிவு கற்பித்து, அவ்வடிவில் திருவடிப் பெருமை பேசுவது ஒரு வகையில் நியாயமே ஆகும். இவ்வுலகிடை மனித னாகப் பிறந்து மேல்நிலை அடைந்த பெளத்த, ஜைனத்