பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 & அ.ச. ஞானசம்பந்தன் தெய்வங்களுக்கும் இத் திருவடிப் பெருமை பேசுவது, பழைய சைவ, வைணவச் சமயங்களின் தாக்கம் என்று நினைப்பதிலும் தவறில்லை. மாரனை வெல்லும் வீர நின்னடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி திமொழிக் கடைந்த செவியோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி வணங்குதல் அல்லது வாழ்த்தல் என்நாவிற்கு அடங்காது (மணி. பாத்திரம் பெ.கா.61-72) என்பது மணிமேகலை. பெளத்த சமய நூலாகிய மணிமேகலை சிலப்பதிகாரத்தை அடுத்து இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றினாலும் திருவடிப் பெருமை பேசுவது பிற சமயத்தாக்கமே என்பதை உணர முடியும். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சீவகசிந்தா தேவாதிதேவன் அவன் சேவடி சேர்துமன்றே. என்றும், இரண்டாம் பாடலில் அடித்தாமரை சென்னி வைப்பாம் என்றும் பாடியுள்ளமை பிற சமயத் தாக்கமேயாகும். மேலும் கமலத் தடிமலர் குடி’ (2739) என்றும் மூர்த்தி திருவடியைப் பத்திமையால் நாளும் பணிகின்றார் (2740) என்றும் எரிமலர்ச்