பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உலக சமாதானம்

அகிலப் பொதுச்சேனை

படை நடத்தல்


நானிலத்தின் மேனிலைக்குச்
சேனை கூட்டினோம்!-பொதுச்
சேனை கூட்டினோம்-வெறி
நாய்கள் ஒக்கப் போர்தொடுக்கும்
ஈனம் ஓட்டினோம்!- கெட்ட
ஈனம் ஓட்டினோம்.

தேனடைக்குள் ஈக்கள் ஒப்பர்
பூதலத்தினோர்!- இந்தப்
பூதலத்தினோர் - அவர்
சீவனத்திற் பேதம்வைத்துப்
பாழ்படுத்தினார்!-துஷ்டர்
பாழ்படுத்தினார்.

 

27