பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அழுக்குச் சுமந்துசெல்லும்
அழகுவெள்ளை முகக்குதிரை
வழுக்காது நடப்பதுபோல்
வாய்த்தநடை என்ன சொல்வேன்! (அண்)

கோல்போல் இடுப்புக்கொரு
கோல ஒட்டியாணம்செய்யப்
பேல்கட்டு வாங்கவேண்டும்
பிரித்துத் தகட்டை எடுக்க வேணும்! (அண்)

பக்குவமாய்ப் பேசும்போது
பாய்ந்துவரும் குரல்ஒலிதான்,
செக்காடும் சங்கிதமே
செவியில்வந்து துளைத்திடுதே! (அண்)

 

41