பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இயற்கைப் பகுதி

அதிகாலை

கொக்கோ கோகோ என இனிமையின்
குரல் மிகுத்திடக கூவல்- செவிக்
குளிர்தரும் அதிகாலை என்பதைக்
குறித்திடும் மணிச் சேவல்!
திக்கார்ந்திடும் இருள் விலகிடும்
சிறு பறவைகள் கூவும்— நல்ல

திரைக்கடல் மிசை எழுந்திடும் முனம்
செழுங் கதிரொளி தூவும்!
தக்கோர் கண்ணில், தெளியுளமதிற்
தகு புதுமைகள் உதிக்கும்- நல்ல

தமிழ்க் கவிதைகள் உழுபவர் சொல்ல
எருதுகள் சதி மிதிக்கும்!
செக்காடுவார் திகு திடு கிறு
கீச்சென வருஞ் சத்தம்!- நல்ல

சேரியின் துணை கோரி அங்குள
ஊர் முழுமையும் கத்தும்.

 

5