பக்கம்:முல்லைக்கொடி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 101

நகைசால் அவிழ்பதம் நோக்கி நறவின் முகை சூழும் தும்பியும் போன்ம்.

இடைப்பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி மிடைப்பாயும் வெள்ளேறு கண்டைகா, வாள்பொரு வானத்து அரவின்வாய்க் கோட்பட்டுப் 45 போதரும் பால்மதியும் போன்ம்.

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா இருபெருவேந்தரும் இகலிக் கண்ணுற்ற பொருகளம் போலும் தொழுஉ.

வெல்புகழ் உயர்நிலைத் தொல்லியல் துதைபுதை 50 துளங்கு இமில் நல்லேறு கொண்ட பொதுவன் முகம் நோக்கிப் பாடிய ஆயமகள் கண். -

நறுநுதால்! என்கொல்? ஐங்கூந்தல் உளரச் சிறுமுல்லை நாறியதற்குக் குறுமறுகி ஒல்லாது உடன்று எமர்செய்தார்; அவன் கொண்ட 55 கொல்லேறு போலும் கதம்.

நெட்டிருங் கூந்தலாய் ! கண்டை, இஃது ஒர் சொல், கோட்டினத்து ஆயர்மகனோடு யாம் பாட்டதற்கு எங்கண் எமரோ பொறுப்பர்; பொறாதார் தங்கண் பொடிவது எவன்? sa 60

ஒண்ணுதால்!

இன்ன உவகை பிறிதுயாது? யாய் என்னைக் கண்ணுடைக் கோலன் அலைத்தற்கு என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/103&oldid=707947" இலிருந்து மீள்விக்கப்பட்டது