பக்கம்:முல்லைக்கொடி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இ. புலவர் கா. கோவிந்தன்

அறிவித்து, அவள் அன்பைப் ப்ெறுவது இயலாது போயிற்று. ஆயர்குல வழக்கப்படி ஏறு தழுவி அவளை அடைதற்கும் வாய்ப்பில்லை. அவள் தந்தை, அவளுக்கு மண முயற்சி மேற்கொண்டு, ஏறு தழுவ வருக!” என இன்னமும் பறையறையவில்லை. மேலும், ஏனைப் பெண்கள்பால் சென்று, காதல் பேச்சுக்கள் பேசுவது போல், அவள்பால் பேசுவது இயலாது; அவள் பிறந்த குடி அத்துணைச் சிறப்புடையது; மேலும், அவள் பெரிய கோடக்காரி. - -

அதனால், அவள் அருகிற் செல்ல அஞ்சிச் சேய்மைக் கண் இருந்தவாறே அவள் அழகைக் கண்டு கருத்திழந்த அவன், "மழை காலத்தில் பெய்தமையால் நிறையப் புல் முளைத்திருக்கும் காவல் அமைந்த நிலத்தில் புகுந்து, நெடிதுபொழுது நின்று, அப்புல்லை வயிறார மேய்ந்து, நீர் குடித்து, நிழலில் உறங்கிக் குடம் குடமாகப் பால் கறக்கும் நல்ல வளம் மிக்க, பசுக் கூட்டத்தில், இதன் உடல் வளத்தைப் பார்; இதன் நடையைப் பார்; இது தரும் பாலின் அளவைப் பார்; அப்பாலின் சுவையைப் பார்! எனப் பிற பசுக்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறத்தக்க வளம் மிக்க ஒரு பசு, போர் என்றவுடனே பாயவல்ல கொல்லேற்றோடு கூடிப் பெற்ற ஒரு காளைக்கன்று, வளர்ந்து வன்மை பெற்ற நிலையில் வண்டியில் பூட்டப் பெற்று, அதை ஈர்த்துச் செல்லுங்கால், இளமைச் செருக் கால் இறுமாந்து செல்வதுபோல், தலையில் தயிர்க்கூடை விளங்க, சிற்றுார் மக்களும், பேரூர் மக்களும் இவள் வருகை கண்டு மகிழ்ந்து ஆரவாரிக்கப் பெருமித நடை போட்டு நடந்து வரும் நடை அழகை, நெஞ்சே! நீ பார்! இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/136&oldid=707980" இலிருந்து மீள்விக்கப்பட்டது