பக்கம்:முல்லைக்கொடி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

சிற்றில் புனைகோ சிறிது!

ஆனிரை ஒம்பும் நல்லினத்து ஆயர் குலத்தில் வந்தவள் அவள். பால் வளம் தரும் பசுக்கள் பல கொண்ட பெரிய குடியில் பிறந்தவள். பெற்றோரால் பேரன்பு காட்டி வளர்க்கப் பெற்றவள். செல்வ வாழ்வால் செருக்குற்றுச் சீரழிந்து போகும் சிறுமைக் குணம் சிறிதும் இல்லாதவள். வளம் கொழிக்கும் வீட்டில் பிறந்தும், வீட்டு வேலைகளை விரும்பிச் செய்யும் விழுமிய குணமுடையவள். ஆனால், வீடே கதி என்று எந்நேரமும் வீட்டினுள்ளேயே அடங்கி யிருக்கவும் அவள் விரும்பாள். வீட்டில் தன் கடமைகள் முடிந்ததும், வெளியே சென்று, தன்னொத்த இளம் பெண்களோடு ஆடியும் பாடியும் அகம் மகிழ்வதில் ஆர்வம் உடையவள். இவ்வாறு புற அழகோடு, அச்சம் நாணம் மடம் முதலாம் அக அழகுகளையும் நிறையப் பெற்றுச் சிறந்து விளங்கினாள், அவ் ஆயர்மகள்.

முல்லை-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/147&oldid=707991" இலிருந்து மீள்விக்கப்பட்டது