பக்கம்:முல்லைக்கொடி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ஒ புலவர் கா. கோவிந்தன்

நான் கூறுவதன் உண்மை விளங்காது போகாது. ஆகவே, விரைந்து வீடடைதற்கு வழி செய்ய வேண்டுகிறேன்!” எனக் கூறிக், கூட்டத்தை விரும்பும் தன் உள்ளக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தினான்.

“நலமிக நந்திய நயவரு தடமென் தோள் அலமரல் அமர்உண்கண் அந்நல்லாய் ! நீ உறீஇ உலமரல் உயவு நோய்க்கு உய்யுமாறு உரைத்துச் செல்;

பேரே முற்றார் போல முன்நின்று விலக்குவாய்; யார்? எல்லா! நின்னை அறிந்தது உம் இல்வழி; 5

“தளரியால்! என்னறிதல் வேண்டின், பகைஅஞ்சாப் புல்லினத்து ஆய்ர் மகனேன், மற்று யான்;

ஒக்குமன்; - புல்லினத்து ஆயனை நீ, ஆயின், குடஞ்கட்டு நல்லினத்து ஆயர் எமர்; 10

எல்லா! நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லைமன்,

ஏதம் அன்று; எல்லை வருவான் விடு;

விடேன்; உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம்பட்டு 15 மெல்லியவாதல் அறியினும், மெல்லியால்! நின்மொழி கொண்டு யானோ விடுவேன், மற்று என்மொழி கொண்டு என்நெஞ்சம் ஏவல் செயின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/170&oldid=708014" இலிருந்து மீள்விக்கப்பட்டது