பக்கம்:முல்லைக்கொடி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 179

மகிழ்ச்சி தரும் அச் செய்தியை அப் பெண்ணுக்கு அறிவிக்கத் துடிதுடித்தாள் அவள் தோழி. அவளை வீடெங்கும் தேடிப் பார்த்தாள்; காணவில்லை. அவளோடு பழகி, அவள் காதலுக்குத் துணை போனவள் அத்தோழி. அதனால் அவள் சென்றிருக்கும் இடம் அறிந்து ஓடினாள். உடலும் உள்ளமும் ஒருங்கே நடுங்க ஒளிந்திருந்த அப் பெண், தோழியைக் கண்டதும், அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, அன்று வீட்டில் நடந்ததைக் கூறி, "மறைந்து மறைந்து மதுவுண்ணும் ஒருவன், மது மயக்கம் தலைக்கேறியதும், யார் யாரைக் காண நாணி, மதுவை மறைந்து உண்டானோ, அவர் முன்னிலையில் நாணாது சென்று, அவர் கண்டு நடுங்கத் தன் மதுப் பழக்கத்தை மலை மேல் ஏற்றிய விளக்கென விளக்கமாக உரைப்பது போல, என் களவு வாழ்க்கையை அம்மலர் காட்டிக் கொடுத்து விட்டதே, தோழி! இனி யான் என் செய்வேன் தாய் முகத்தில் எவ்வாறு விழிப்பேன்!” எனக் கூறி. அழுதாள். - .

.

அவள் கூறாமுன்பே அனைத்தையும் அறிந்திருந்த தோழி, "பெண்ணே ! இதற்காக ஏன் இவ்வாறு நடுங்கு கிறாய்? நம்மைப் பெற்றவர்களின் பண்பாடு அறியாத பேதை நீ. நீ அவன் அளித்த மலரைச் சூட்டிக் கொண்டாய்; அது அறிந்த நம் பெற்றோர் உன்னை அவனுக்கே மணம் செய்து தர உறுதி பூண்டனர்; அதற் கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன; நம் பெரிய வீட்டிற்கு வெள்ளை அடித்துச் செம்மண் பூசி ஆயிற்று; முற்றத்தில் புதுமணல் பரப்புகின்றனர்; ஆங்கே பந்தல் அமைத்துத் திருமணத் திரையும் கட்டியாயிற்று. தாயும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/181&oldid=708025" இலிருந்து மீள்விக்கப்பட்டது