பக்கம்:முல்லைக்கொடி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

நாடி வருவை நாணிலி!

குடும்பப் பொறுப்புணர்ந்த குமரி அவள். தான்் பிறந்த ஆயர் குடியில், அவரவர்க்குரிய கடமைகளை அவரவர் செவ்வனே செய்து முடித்தல் வேண்டும் என்ற சிறந்த உள்ளமும் உடையவள்; அவரவர்களின் ஆண்டு நிறைவிற்கும், ஆற்றலுக்கும் ஏற்பவே, அவள் வீட்டில் கடமைகள் வரையறுக்கப் பெற்றிருந்தன. தந்தையும் தமையன்மாரும் ஆனிரைகளை ஒட்டிச் செல்ல, அவ் வானிரையோடு சேணெடும் தூரம் செல்ல மாட்டாமை யால், வீட்டில் விடப்பட்டுள்ள கன்றுகளைத் தன் வீட்டிற்கு அணித்தாக உள்ள தோட்டங்களுக்குக் கொண்டு சென்று மேய்ப்பதும், ஆனிரை மேயும் இடத் திற்குக் கறவைக் கலங்களோடு சென்று, அவர்கள் கறந்து தந்த பாற்குடங்களை விட்டிற்குக் கொண்டு வருவதும் அவளுக்கு ஒதுக்கிய பணிகள். அதில் அவள் பெரிதும் கருத்துடையவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/184&oldid=708028" இலிருந்து மீள்விக்கப்பட்டது