பக்கம்:முல்லைக்கொடி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஆநிரைகள் இன்றும் ஆயர்பாடிகளிலே மலிந்து விளங்கு கின்றன.

மேய்ச்சல் நிலங்கள் உலகெங்கும் பல பகுதிகளில் உள்ளன. அங்கு வாழ்வாரும் நம் நாட்டு ஆயர்களைப் போன்ற வாழ்க்கையையே அமைத்துக் கொண்டு வாழு கின்றனர். ஆநிரை மேய்த்தும், ஆடும், எருமையும் வளர்த்தும், அவற்றால் பெறும் பயன் கொண்டும் வாழ்வதே அவர்கட்கும் இயல்பாக விளங்குகின்றது.

மஞ்சி விரட்டு என்னும் ஏறுதழுவுதல் ஆயரிடை விளங்கி வந்த ஓர் ஆண்மைச் செயலாகும். இதனையும் உலகெங்கும் உள்ள ஆயரிடை விளங்கக் காணலாம். ஆயரிடை மட்டும் நிலவிய இவ்வழக்கமே, இன்று மற்றைய பிற இனத்தவராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது கண்கூடு.

முன் காலத்தில், ஆயர்களின் தனி உரிமையுடைய விழாவாக விளங்கிய ஏறுதழுவுதல், இன்றோ, பல்வேறின இளைஞரும் கலந்து கொள்ளும் ஆற்றல் மிகுந்த மஞ்சி விரட்டாக விளங்குகின்றது. விழாவிற் கலந்து கொள்வார் நிலையால் மாறுபட்டது போலவே, விழாவின் நோக்கமும் பெரிதும் மாறிவிட்டது.

அக் காலத்தில், ஏறுதழுவி வென்றே ஆயர்குல இளைஞர் தம் காதலியரை மணந்து இல்லறம் புகுவர். இளைஞர், தம் காதலியரை அடைவதற்குத் தவறாது கொல்லேறு தழுவியேயாதல் வேண்டும். அதன்கண் வெற்றி பெற்றாலன்றிப், பெண்ணின் பெற்றோர் அவர்க்குத் தம் மகளிரை மணஞ் செய்து தருவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/8&oldid=707852" இலிருந்து மீள்விக்கப்பட்டது