பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கணவர்' என்பதைப் படித்திருக்கிறாள் அந்த அமெரிக்க நடிகை பாரதப்பெருமை நம் தாய்மார்களை பற்றி பிற நாட்டினர் தவறாகக்கருதும் நிலையை ஏற்படுத்துகிறது. எவ் வளவு பெரிய அவமானம் நமது நாட்டுப் பெண்டிர்க்கு. நாட்டு கலாசாரத்திற்கு. இருக்கலாமா இந்த இருபதாம் நூற் றாண்டிலும்? மார் தட்டுகிறாயே மகாபாரதம், ராமாயணம் ரஷ்யாவிலே மொழி பெயர்க்கப்படுகிறதென்று. மொழி பெயர்த்த பின்னல்லவா தெரியப்போகிறது உன் வண்ட வாளங்கள்! சிலப்பதிகாரத்தை, சங்க இலக்கியத்தை, புறத்தை. அகத்தை, கலிங்கத்துப் பரணியை மொழி பெயர்க்கிறார் கள் என்று சொல்லு; அர்த்தம் உண்டு, யோக்கியதை உண்டு-தகுதியுண்டு. அதைவிட்டு ராமாயணம், மகா பாரதம் மொழிபெயர்க்கப்படுகிறதென்று சொல்லுகிறாயே; எத்தகைய இழிவு நாட்டிற்கு! முட்டாள்தனமான புராணக் கூளங்கள், வேதாந்தம் இவைகளையன்றி நீ எதை மொழி பெயர்க்க வைத்திருக்கிறாய்? . அந்தக் காலத்தில் இவைகளை யெல்லால் நம்பினார்கள் பெரியவர்கள். வாலிபர்கள்; இந்தக் காலத்திலே கருப்புச் சட்டைக் காரர்கள். அண்ணாத்துரைக் கட்சிக்காரர்கள் இப்படி கடவுளைத் திட்டப்போய்தான் நாட்டிலே நாஸ் திகம் பெருத்து மழையே இல்லாது போய் விட்டதென்று வெட்கமில்லாமல் உளறுகிறாயே, சொல்லுகிறாயே கொஞ்சமும் அறிவின்றி. அந்தக் காலத்திலே 12 வருட காலம் மழையின்றி பஞ்சத்தால் கஷ்டப்பட்ட நல்ல தங்காள் கதையை எழுதி வைத்துக் கொண்டு இப்படி கூப்பாடு போடுகிறாயே !