பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 • விவேகிகள் அற்ற வீணர் கூட்டமாக, சரிந்த கோட்டை யாக நம் இயக்கமும் ஆகலாமா ? கூடாது தோழர்களே ! கூடாது! திராவிடம் மீண்டால்-இவர் பல கூட்டங்களில் பேசி யிருக்கிறீரா அவரையே சீனாவின் தூதுவராக அனுப்பி விடலாம் என்று முடிவுகட்ட முடியுமா? முடியவே முடியாது ; ஒரு நாட்டின் தூதுவராக வேண்டு மென்றால், அதற்குரிய தனித் தகுதியும், திறமையும் வேண்டாமா ? ஆகவே, அதற்கொரு படை தேவை ! அதுதான் விவேகிகள் படை ! அந்தப் படையாக நீங்கள் வாருங்கள் படையுடன் சேர்ந்து வளருங்கள் ! மாணவர்களைப் பொறுத்தவரை அரசியல் ஒரு பழுக்காத கனி! பருவமடையாத மங்கை ! பழுக்காத கனி பார்க்க நன்றாக இருக்கலாம்; ஆனால் புசித்தால் ஒன்று புளிக்கும் அல்லது கசக்கும் ! பக்குவப் பட்டபின் நன்கு பழுத்தபின் புசிப்பதே முறை- பலன் பெரும் பாதை. 1 அதே போலத்தான் பருவமடையாத மங்கையும்! பார்க்கச் சுவைக்கும் புது வண்ணத்துடன் வளர்ந்திருக்க லாம்! அவள் ; இன்னும் அத்தை மகளாகக்கூட இருக்க லாம்! ஆனால், அத்தை மகள் என்ற உரிமையுடன் சுற்றிச் சுற்றி வரலாம்! வட்டமிட்டுப் பேசலாம்! ஆனால் தொட்டுவிடக் கூடாது! மாணவர்கள் இந்த உண்மையை உணரவேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் உங்களிடம் கேடயங்களை எதிர்பார்க்கவில்லை! கத்திகளுக்காகவும் காத்துக் கொண்