பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாடை வீசுகிறது. காட்டு மிராண்டித் தனமான பலாத் காரமான ; அராஜக; அக்ரம நிலைமை அதிகரித்து வருகிறது, 'சுதந்திரச் சூரியன் தோன்றி நான்காண்டுகளிலே இந்த நல்லவர்கள் ஆட்சியிலே 1932 முறை அக்ரமத் துப் பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது. 82 பேர்; சுட்டுக் கொல்லப்பட்டனர்; 10.000 பேர் சிறையில்! எங்கே.நடந்தது இந்த வெங்கொடுமை விளையாட்டு? ஜப்பானிலா? ஜெர்மனியிலா? இத்தாலியிலா? ரஷ்யாவிலா? இல்லை ; இந்தப் 'புண்ய பூமி'யில் தான் ! 82āபேர்; யார் ? முற்றுகை யிட்டவரா திடீரென்று. அகிம்சைக்கு எதிராக? சண்டமாருதமாகக் கிளம்பி : இந்தி யாவிலே; சமரசப் போருக்கெதிராக, சங்குமுழக்கியவரா.... இல்லை இந்தியப் பிரஜை தான். “வந்தே மாதரம்! என்று, மேடையிலே பாடியவர்கள்தான். சிறைச் சாலையிலே சேலத்திலே சுட்டார்கள். நம் மேடைகளுக்குத் தடை போட்டார்கள்; கையிலே கத்தி யெடுத்தல்ல - ஒரு கொடி எடுத்து-அதிலே கொம்பு கூடக் கிடையாது; கையிலே கொடி பிடித்து கொள்கை காக்க. குமுறும் உள்ளத்தை எடுத்துக் கூற வந்தவர்களின் மீது குதிரை விட்டு மிதித்தனர். லத்தியாலே. குத்தினர். இரத்த ஆறு காட்டினர். அதிகாரத் தேர் பவனி வருகிறது காங் கிரஸ், அகிம்சை வீதிகளிலே ! இந்த பவனிதான் காந்தியார் கண்ட கனவா ? இது தான்; இராம இராஜ்ய பவனியா ? இதைக் கூறித்தான், ஓட்டு கேட்டனரா மேடைகளிலே!