பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’ “கைத்தறி வாங்கலியோ ” ஜனவரித் திங்கள் நாலாம் நாள் தமிழகத்தின் வீதி களிலே இந்தக் குரல் உரக்க ஒலித்தது. வேதனைக் குரலை மாற்றுவதற்காக வியாபாரக் குரல் ஒலித்தது. ஒலித்தவர்கள் வழக்கமான வியாபாரிகள் அல்ல. ஒரு பெரிய கட்சியின் தலைவர்கள், பிரச்சாரர்கள், தொண்டர்கள், செயல் வீரர்கள். பெரிய நகரங்களிலே, பட்டி தொட்டிகளிலே ‘கைத்தறி வாங்கலியோ' என்று கூவிக்கொண்டு சென்றார்கள். குறைந்த விலை, சிறந்த துணி, சாயம்போகாது சசமானது என்றெல்லாம் வியாபார பாஷைகள் தெரியாதவர்கள். 'சொந்தமிருந்த சோதரிகாள் அன்புத் தோழர்களே' என்ற உடுமலைக் கவிஞரின் பாடல்களின் பாடல்களைப் பாடிக் கொண்டே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஒவ்வொரு ஊரிலும் வியாடாரம் செய்திருக்கிறார்கள். பொதுச் செய லாளர் அண்ணா அவர்கள் திருச்சி மாநகரத்திலும் முன்னணி வீரர்கள் வேறு பல ஊர்களிலும் ஆடைகளை ஆயிரக் கணக்கில் விற்றது மட்டுமல்ல; லக்ஷக்கணக்கான மக்க ளிடத்திலே, கைத்தறியாளரின் நிலைகுறித்தும், அவர்கள் கஷ்டம் தொலைக்க கைத்தறிகளையே உடுத்த வேண்டு