பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

பெரும் புலவர் உலகிற் சிலரே யாவர். புலவனுடைய திறமை யெல்லாஞ் “சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைக்” காட்டுகின்ற அரும் பெருஞ் செய்கையினாலேதான் அறியப்படும். இங்ஙனம் பாட்டுவழக்கின் நுட்பமுணர்ந்து பிறமொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப்புலவர்கள் ஓமர்,[1] தாந்தே,[2] செகப்பிரியர்,[3]மிலிட்டனார்,[4] கீதே[5], காளிதாசர் முதலியோரும், நஞ்செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து எனை நல்லிசைப்புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற்

பெருகுமென் றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றாம்.


  1. Homer
  2. Dante,
  3. Shakespeare,
  4. Milton,
  5. Goethe,