பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை மாயிற்று என்று தெளிவுற அறிதல்வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவநாயனார் இயற்றிய அரிய பெரிய திருக் குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க் குரிய அறிவாழ நுட்பப்பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க. t இனி, இப் பொருள்களெல்லாம் பெத்தசமய நூல் களிலிருந்தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாருந், திரு வள்ளுவநாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற் கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தை யே கௌதமர் என்னுந் தமிழ்ப்பெரியார் விளக்க வந்த மையால், அவ் வொழுக்க வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான்றோர், தமக்குந் தம்மி னத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங் கருத்துக்களையே பெத்தசமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம் பெற்றா ராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கௌ தமசாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக. "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ் வாறே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்துபோந்த மற்றை வினைச் சடங்குகளையும் மறுத்துக்கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.