பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு று உரு இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக் கங்களுக்கும் அக்காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஐந்நூறாண்டின்கண் நடை பெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேம். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கிலமொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவில்லியம் மிண் டோ என்னும் ஆராய்ச்சி உரைகாரர், "காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற் றும் நூல்களிலுங், கொத்துவேலைகளிலும், உடைகளி லும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குங் தொழிற்களங்களிலும் எல்லாந் தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது. ஒரு புலவனும் ஒரு காலஇயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனாவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக் கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந் தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக் காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையி னியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாகும்." என்று மிகநுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க.

  • Professer William Minto.

t The Literature Of the Georgian Era, pp. 42-48. 4