பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை இனி, இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூலக ளெல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர் தோன்றி விளங்கப்பெறும் ஒருதன்மை யுடைய வாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரியமக்கள் செய்து போந்த வீணான வெறுஞ்சடங்கு களிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்துநின்ற தமிழ் மக் கள், தம் பண்டை யாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள்நுட்பங் களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத்தன்மையாகுமென் றுணர்ந்துகொள்க. இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுந் தொல் லாசிரியரால் வகுக்கப்பட்டன. இவற்றுள் 'அகப்பொ ருள்' என்பது ஆண்பெண் என்னும் இருபாலாரையுஞ் செறியப்பொருத்துவதாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுந் தனக்குக் கீழாகநிறுத்தித் தான் அவற் றின்மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந் துன்பமுமெல்லாந் தோன்று தற்குத் தான் நிலைக்களனாய், எல்லா உலகங்களும். எல் லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந்திரிபின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்* என் பதனை அடிப்படையாகக்கொண்டு மக்களியற்கை முழுவ

  • Love.